January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். – சென்னை விமான சேவையை ஆரம்பிக்கும் ‘எயார் இந்தியா’

யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைகளை செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு இந்தியாவின் ‘எயார் இந்தியா’ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

வாரத்திற்கு இரண்டு முறை யாழ். பலாலி விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு இடையே விமான சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை ஊடாக இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆகஸ்ட் மாதம் முதல் பலாலி விமான நிலையத்தை மீள இயக்க தீர்மானிக்கப்பட்ட போதும், சில காரணங்களால் அந்த நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.