January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சை சாதனையாளர்கள்!

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவனான தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப்பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இவர் வைத்திய நிபுணர் தமிழ்வாணன் மற்றும் வைத்தியர் பகீரதி தம்பதியினரின் இரண்டாவது மகனாவார்.

மருத்துவதுறையின் விஞ்ஞானியாக பல கண்டுபிடிப்புகளை செய்யவேண்டும் என்பதே தனது இலட்சியம் என மாணவன் துவாரகேஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கம்பஹா ரத்னவலி மகளிர் வித்தியாலய மாணவி இஷினி நேஹா அமரரத்ன, வணிகப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளார்.

அத்துடன் கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் சஹன் சமரகேன், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.