
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று மாலை பெறுபேறுகேள் வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.
இம்முறை மூன்று பாடங்களிலும் பரீட்சைக்கு தோற்றிய 272,682 மாணவர்களில் 171,497 பேர் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.