இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கையர்களினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் சென்ற பெருந்திரளாவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதல்கள், போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.