நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்திகள் பரப்பப்படுவதாகவும், அதனை நம்பவேண்டாம் என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க வேண்டியது தமது கடமை எனவும், அதன்படி அதனை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிக்கையொன்றை வெளியிட்டு பெட்ரோலியக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி நாட்டில் வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து எரிபொருளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.