January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வர விரும்பும் 24 வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள்!

இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தை முன்னெடுக்க 10 நாடுகளின் 24 நிறுவனங்கள் யோசனைகளை முன்வைத்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா, மலேசியா, நோர்வே மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்களே இவ்வாறு யோசனைகளை முன்வைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் இந்திய நிறுவனமொன்று எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.