June 12, 2025 10:27:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மாணவர்களுக்காக அமெரிக்கா உணவுப் பொருட்கள் நன்கொடை!

இலங்கை பாடசாலை மாணவர்களுக்காக 3000 மெட்ரிக் டொன் உணவுப் பொருட்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.

பாடசாலை மாணவர்களின் போசாக்கினை அதிகரிக்கும் வகையில் அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இந்த உணவுப் பொருட்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இன்று உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.