அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருக்கும் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது எனவும், அவர்களின் தடுப்புக் காவலை செல்லுபடியற்றதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ரவிஹர பின்னதுவகே ஊடாக இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர், பயங்கரவாத எதிர்ப்பு பணியகத்தின் பணிப்பாளர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்