
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் இன்று கையொப்பமிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அந்த ஆவணம் சிறைச்சாலைகள் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதையடுத்து, இன்று பிற்பகல் அவரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விடுதலையான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு புதிய பதவியொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதன்படி வெளிநாட்டு பணியாளர் நலன்புரி மற்றும் ஊக்குவிப்பு தூதுவராக அவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.