
யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாவின் தீர்த்தோற்சவம் இன்று நடைபெற்றது.
இன்று காலை வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜை என்பன இடம்பெற்ற பின்னர், ஆலயத்தின் ஷண்முக தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் தேர்திருவிழா நடைபெற்றதுடன், இன்றைய தினம் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.