January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் நீளும் எரிபொருள் வரிசைகள்!

File Photo

பிரதான களஞ்சியங்களில் கையிருப்பில் உள்ள டீசல் மற்றும் பெட்ரோலின் அளவு குறைவடைவதால் மீண்டும் எரிபொருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது போதுமான அளவுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்ல முடியாதுள்ளதாக இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் பல இடங்களில் எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில் அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 92 ரக ஒக்டேன் பெட்ரோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 27 மற்றும் 29ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.