மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் மாற்றம் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பரில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டின் போது இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெதரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பொருளாளர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாக கட்சிக்குள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலைமையில் குறிப்பிட்டப் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கட்சிக்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதன்படி குறித்தப் பதவிகள் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் சிலவற்றில் செப்டம்பரில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.