November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரவு செலவுத் திட்ட உரை அடுத்த வாரம்!

2022 ஆம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த உரை நிகழ்த்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 மற்றும் 2 ஆம் திகதி அது தொடர்பான விவாதம் நடத்தப்பட்டு 2 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டமூலத்திற்கமைய அரசாங்கத்தின் செலவீனம் 3,275.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனமாக 2,796.44 பில்லியன் ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டுச் திருத்தச் சட்டமூலத்தில் அந்தத் தொகை 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கக் கூடிய வகையிலேயே இவ்வாறு திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.