இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பிலுள்ள மத்திய வங்கி கட்டடத்தில் இந்த பேச்சுவார்த்தை இன்று காலை ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பேச்சுவார்த்தையில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பர் என்பதுடன், இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளனர்.
இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.
எனினும், இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் இதுவரையில் எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படவில்லை.