ஆகஸ்ட் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டொலர் நெருக்கடி நிலைமையால் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டை விதிக்குமாறு அண்மையில் மத்திய வங்கியினால் நிதி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய மறு அறிவித்தல் விலையில் குறிப்பிட்டப் பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாட்டை விதிப்பதற்கு நிதி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பால் உணவுப் பெபாருட்கள் உள்ளிட்ட சில உணவுப் பண்டங்கள், வாசனை மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.