பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஆட்டோக்களை பதிவு செய்து ஒழுங்குபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மேல்மாகாணத்தில் இருந்து இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் மேல்மாகாணத்தில் உள்ள ஆட்டோக்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்காலத்தில் மற்றைய மாகாணங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.