பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்திற்கான சட்டமூலத்தை கொண்டு வருவது தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவையில் தெளிவுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் அமைதியாக நடந்து கொள்வதற்கும் மக்களுக்கு சுதந்திரம் உண்டு. எனினும் வன்முறைகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.