
Photo: Facebook/ Ranjan Ramanayake
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி அந்த ஆவணங்களில் கையெழுத்திட்ட பின்னர், அடுத்த வாரத்தில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலையாகுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.