January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இலங்கைக் குடியரசை விட நான் பணக்காரன்”: ஜனாதிபதி ரணில்!

இலங்கை குடியரசை விட ஆயிரம் மடங்கு தான் பணக்காரனாக இருக்கின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிபுணர் சங்க கூட்டமைப்பின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வருகிறோம். நிலைமை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றது. இதனால் அவசரகால நிலையை மீண்டும் நீட்டிக்க எதிர்பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நிதியமைச்சரானவுடன் நான் ஒன்றை உணர்ந்தேன். அந்நியச் செலாவணியைப் பொறுத்தவரை நான் இலங்கைக் குடியரசை விட பணக்காரன். என் வீட்டில் ஆயிரம் டொலர்கள் சேமித்து வைத்திருக்கிறேன், அதனால் நான் குடியரசை விட ஆயிரம் மடங்கு பணக்காரன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.