கொழும்புக்கு அருகே இரத்மலானை கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
50 வயது மதிக்கத் தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தொடர்பில் இரத்மலானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் காலிமுகத்திடல், வத்தளை உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோன்று கரையொதுங்கிய மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.