Photo: Facebook/ Wimal Weerawansha
இலங்கை வந்துள்ள சர்ச்சைக்குரிய சீனக் கப்பலை முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் வரவேற்றுள்ளனர்.
குறித்தக் கப்பல் இன்று முற்பகல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில், அங்கு சென்ற வீரவன்ச குழுவினர் கப்பலுக்கு வரவேற்பளித்தனர்.
இதன்போது அங்கு உரையாற்றிய வீரவன்ச, இந்து சமுத்திரம் எப்போதும் அமைதியின் வலயமாகவே இருக்க வேண்டுமே தவிர சண்டையின் வலயமாக இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனா இலங்கைக்கு எந்த நிலையிலும் உதவும் நாடாகவே இருக்கின்றது என்றும், இந்த நாடு இலங்கையின் அரசியல் செயற்பாடுகள், ஆட்சி மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் எப்போதும் தலையிட்டதில்லை என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.