விலைச்சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதும், எரிசக்தி அமைச்சு அவ்வாறாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட விலைச்சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலைகளில் மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதன்படி நேற்றைய தினத்தில் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.