எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்தில் அனைத்து உப வேந்தர்களுடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுக்க உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தாலும் மருத்துவ மற்றும் இணை சுகாதார பீடங்களின் செயற்பாடுகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றது.
அதேபோன்று பெருமளவான மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்து கற்றல் செயற்பாடுகளை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.