சர்ச்சைக்குரிய அதி தொழில்நுட்ப வசதிகளுடனான சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சு அந்தக் கப்பலுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இன்று காலை கப்பல் இன்று முற்பகல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.
கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிற்கும் காலப்பகுதியில் எவ்வித ஆய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில், இலங்கை அரசாங்கம் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு சீனா அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.
இதனால் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையை வந்தடையவிருந்த கப்பல் வருகையை தாமதப்படுத்தியிருந்தது.