ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அவர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவர் துபாய் செல்வதற்காக விமான நிலையம் சென்றிருந்த போது, சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தானிஷ் அலி, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவருக்கு இன்றைய தினம் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை விளக்க மறியல் சிறையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 4 ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு தானிஷ் அலிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.