இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு ‘டோனியர் 228’ விமானம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வமாக அந்த விமானம் இன்றைய தினம் இலங்கை விமானப் படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கடல்சார் கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தக் கூடியது என்று தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தை கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றது.
குறித்த விமானம் தரையிறங்கியதும் அதற்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, “பரஸ்பர புரிந்துணர்வு,நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன் டோனியர்228 விமானம் பரிசளிக்கப்படுகின்றமை இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாகும்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
"Security of #India and #Srilanka is enhanced by mutual understanding, mutual trust and cooperation. Gifting of Dornier 228 is #India's latest contribution to this cause ." High Commissioner Gopal Baglay at the handing over event. pic.twitter.com/x8wa0v8mT6
— India in Sri Lanka (@IndiainSL) August 15, 2022