January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க யோசனை!

எரிபொருள் நெருக்கடியால் தற்போது தினசரி அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட மின் உற்பத்தி பிரிவில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே மின் வெட்டு நேரத்தை அதிகரிப்பதற்கு ஆராயப்படுகின்றது.

இதன்படி நாளாந்தம் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை 3 மணித்தியாலங்கள் வரையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று மின்சக்தி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தினசரி ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் நுரைச்சோலை மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறை சீர் செய்வதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படலாம்.