மன்னார், மடுமாதா தேவாலயத்தின் ஆவணி மாத திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்தத் திருவிழா நடைபெற்றது.
இந்த திருவிழாவில் இலங்கை முழுவதும் இருந்து ஆயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் கொவிட் தொற்று நிலைமையால் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கையுடனேயே திருவிழா நடைபெற்றது.
எனினும் தற்போது கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பெருமளவான மக்கள் இம்முறை திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.