நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அந்த மின்பிறப்பாக்கி ஊடாக மின் உற்பத்தியை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது அது செயலிழந்துள்ளதாகவும், தற்போது அதனை திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் அங்குள்ள மூன்றாது மின்பிறப்பாக்கி ஊடாக மின் உற்பத்திகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இரண்டாவது மின்பிறப்பாக்கி இயந்திரத்தின் பராமரிப்பு பணிகள் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.