January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெட்ரோல் விலை இன்று குறையுமா?

எரிசக்தி அமைச்சின் விலைசூத்திரத்திற்கமைய இன்றைய தினத்தில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு விலைசூத்திரத்தின் கீழ் ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருதடவை எரிபொருள் விலைகளில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த முதலாம் திகதி டீசல் விலை குறைக்கப்பட்டது. எனினும் அப்போது பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை

இந்நிலையில் இன்றைய தினத்தில் பெட்ரோல் விலையில் மறுசீரமைப்பு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.