அரச செலவீனங்களை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி செயலாளரினால் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனால் அரச செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளர் சுற்றுநிருபமொன்றை வெளியிட்டு அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி எரிபொருள், மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட தொடர்பாடல் சேவைகள் ஆகியவற்றை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் புதிய கட்டிடங்களை வாடகைக்கு எடுத்தல், புதிய வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.