இலங்கையில் டொலர் நெருக்கடி தொடரும் நிலையில், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கியினால் நிதி அமைச்சுக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமையில் எரிபொருள், மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக மாத்திரம் கையிருப்பில் உள்ள டொலரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதானால் டொலர் நெருக்கடி நிலைமையை ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய வங்கி நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டிய 2500 பொருட்களின் பட்டியலொன்று மத்திய வங்கியினால் நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.