January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முட்டை, கோழி இறைச்சி விலைகள் மேலும் உயர்வு!

முட்டை விலை 70 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என்று அகில இலங்கை முட்டை மற்றும் கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1500 ரூபாவை தாண்டலாம் என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கோழித் தீவனத்திற்கான தட்டுப்பாடு மற்றும் அதன் விலைகள் அதிகரிக்கப்பட்டமை ஆகியனவே இதற்கு காரணம் என்று அகில இலங்கை முட்டை மற்றும் கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சந்தையில் முட்டையொன்று 50 ரூபா முதல் 60 ரூபா வரையிலும் கோழி இறைச்சி கிலோவொன்று 1300 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.