January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண ஆளுநர் பதவிகளில் விரைவில் மாற்றம்!

மாகாணங்கள் சிலவற்றின் ஆளுநர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி மேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் ஆளுநர் பதவிகளிலேயே மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாண ஆளுநராக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தனவையும், மத்திய மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவையும் நியமிக்க கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஊவா மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானை நியமிப்பதற்காக அந்தக் கட்சியினரால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆளுநர்களாக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.