November 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர்தரப் பரீட்சை தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்!

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு 80 வீத பாடசாலை வருகை அவசியமில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வழமையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், அதற்காக விண்ணப்பிக்கும் போது 80 வீத பாடசாலை வரவை பூர்த்தி செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால் நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை மற்றும் போக்குவரத்து நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இம்முறை பாடசாலை வரவு வீதம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.