January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் 2000 நாட்களை எட்டியது!

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் 2000 நாட்களை எட்டியுள்ளது.

இதனையொட்டி இன்றைய தினம் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிந்தது.

யுத்தக் காலத்தில் பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போன தமது உறவுகளுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரணியில் கலந்துகொண்டோர் வலியுறுத்தினர்.

இதேவேளை ஐநாவுக்கு அனுப்பி வைக்கும் வகையில், யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய நாடுகள் கிளைக்காரியாலயத்தில் மகஜர் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு அந்த சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.