கொழும்பு நகரில் உள்ளவர்களின் பேஸ்புக் கணக்குகளை ஆராய்ந்து, அண்மையில் இடம்பெற்ற போராட்டங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசனர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் கணக்குகளில் உள்ளவற்றை தரவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு வருமாறு அழைத்து விசாரிப்பதாக அவர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்கு சென்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான விசாரணைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனை தான் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.