January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு அருகே வட்டமிடும் சீனக் கப்பல்!

சர்ச்சைக்குரிய அதி தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சீன ஆய்வுக் கப்பல் இலங்கையை நெருங்கியுள்ள போதும், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் அந்தக் கப்பல் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் வட்டமிட்டுக்கொண்டிருப்பதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கிக்கின்றன.
குறித்தக் கப்பல் நேற்று மாலை இலங்கையிலிருந்து 600 கடல் மைல் தொலைவில் இந்து சமுத்திர பகுதியில் பயணித்தது.

நேற்றைய தினத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, கப்பல் துறைமுக பகுதிக்குள் நுழைய முடியாது இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் வட்டமிடுவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் அந்தக் கப்பலுக்கு இலங்கை துறைமுகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்குவதற்கு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று ஹாபர் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கப்பல் இலங்கைக்கு வருவதை தாமதப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சு கோரியுள்ள போதிலும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்கு அதற்கு அனுமதி அளிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து இதுவரையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.

இந்தக் கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்ட பின்னர் கடந்த 28 நாட்களாக இந்த கப்பலுக்கு தேவையான எரிபொருள் உணவு மற்றும் பானங்கள் மீள் நிரப்பப்படவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த பின்னரே அந்த தேவைகளை நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டிருந்தது.