ஆட்டோக்களுக்கு வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டு அளவை அதிகரிப்பதற்கு எரிசக்தி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி கட்டணம் அறவிட்டு, பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் ஆட்டோக்கள் தொடர்பான அறிக்கையொன்றை வழங்குமாறு போக்குவரத்து அமைச்சிடம் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அறிக்கை கிடைத்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் ஆட்டோக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஆட்டோக்களுக்கு வாராந்தம் 5 லீட்டர் பெட்ரோலே விநியோகிக்கப்படுகின்றன.
இது போதுமானது அல்ல என்றும், இந்த அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆட்டோ சாரதிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.