File Photo
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் பல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தனித் தனியாக சந்தித்து கலந்துரையாடி வருகின்றன.
ஏற்கனவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ள நிலையில், நேற்றைய தினத்தில் சிறுபான்மை கட்சிகள் சில அவரை சந்தித்துள்ளன.
அந்த வகையில் ஶ்ரீலங்கா முஸ்லிங் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சீ.வி.விக்னேஸ்வரனும் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.