ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது, இலங்கை எதிர்கொள்ளும் சவாலான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் பங்காளியாக செயற்படுவதாக தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சந்திப்பில், ஜீஎஸ்பி வரிச் சலுகைகள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் தற்போது முன்னெடுக்கப்படும் பிரதான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும், இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கைக அரசாங்கம் மீது நம்பிக்கை கொள்வதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.