November 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய அரசியலமைப்புத் திருத்தம் சபையில் சமர்ப்பிப்பு!

அரசாங்கத்தினால் நிறைவேற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவினால் இந்த சட்டமூலம் இன்று சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுலில் இருக்கும் நிலையில், அதில் காணப்படும் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை அதிகளவில் வழங்கக் கூடிய வகையில் 22 ஆவது திருத்தத்தை அரசாங்கம் தயாரித்துள்ள நிலையில் அதற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதனை தொடர்ந்து அந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன், இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்கனவே எதிர்க்கட்சியினரால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனையை கொண்டு வந்துள்ளது.

எனினும் அதில் காணப்படும் பல விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்பதனால் அவற்றை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறான நிலைமையில் அரசாங்கத்தின் புதிய திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

14 நாட்களின் பின்னர் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதம் நடத்தி, அதனை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

22 ஆவது திருத்த வரைபை இந்த இணைப்பில் வாசிக்கலாம்