120 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கொழும்பு காலிமுகத்திடல் ‘கோட்ட கோ கம’ போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றியுள்ள அவர்கள், இன்று மாலை அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை போராட்ட களத்தில் இருந்து வெளியேறுமாறு பொலிஸாரால் விதிக்கப்பட்டிருந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் போராட்டக் குழுவை சேர்ந்தவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை மீளப் பெற்றுக்கொள்ளவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
குறித்த மனுக்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆராயப்பட்ட போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.