January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம் ஆரம்பமாகும்”

நாடு முழுவதும் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று எரிபொருள் பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இம்மாதம் 13 ஆம் திகதி கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று வரவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதன்படி மண்ணெண்ணெய் விநியோகத்தை 19 ஆம் திகதி முன்னெடுக்க முடியுமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மண்ணெண்ணெய் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.