
தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இதுவரையில் 15 ரூபாவாக உள்ள சாதாரண தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை 45 ரூபாவாக உள்ள பதிவு தபால் கட்டணம் 110 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
அத்துடன் தபால் பொதி கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.