File Photo
மின்சாரக் கட்டணங்களை 75 வீதத்தால் அதிகரித்து அரசாங்கம் மக்களை மின்சாரக் கதிரையில் அமர்த்தியுள்ளது என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று விசேடக் கூற்றை முன்வைத்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சியாளர்கள்தான் இதற்கு முன்னர் தங்களை மின்சாரக் கதிரையில் அமர்த்தப் போகின்றார்கள் என்று பிரசாரம் செய்தினர். ஆனால் மக்களே இப்போது மின்சாரக் கதிரையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மின்சாரக் கட்டணங்களை அதிகாரித்தால் மக்கள் எப்படி வாழப் போகின்றார்கள். இதனால் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார்.