
சீனாவின் சர்ச்சைக்குரிய ஆய்வுக் கப்பல் இலங்கை நோக்கிய பயணத்தை வேகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேகத்தை அதிகரித்துக்கொண்டு அந்தக் கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அந்தக் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகள் சீன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் ஏற்கனவே இலங்கை நோக்கிய பயணத்தை கப்பல் ஆரம்பித்திருந்தமையினால் திட்டமிட்டப்படி 11 ஆம் திகதி கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் இந்தக் கப்பல் இலங்கையில் இருந்து 680 கடல் மைல் தொலைவில் மணித்தியாலத்திற்கு 14 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.