
வடமாகாண ஆளுநர் தமிழ் பெயரைக் கொண்டவராக இருந்தாலும் அவருக்கு தமிழே தெரியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் முன்பள்ளிகள் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவினரின் கீழ் நிர்வகிக்கப்படுவது தொடர்பாக வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு அறிவித்த போதும், அது தொடர்பில் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்கின்றார் என்று சிறீதரன் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் வடக்கு ஆளுநர் தமிழ் மொழி தெரியாதவராகவும், நிருவாகம் செய்யத் தெரியாதவராகவும் இருந்துகொண்டு சண்டியர் போன்று செயற்படுகின்றார் எனவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்கள் அவரை திட்டமிட்டே நியமித்துள்ளனர் என்றும், அவரை மாற்றுவதற்கு எவரும் தயாராக இல்லை என்றும் பாராளுமன்றத்தில் சிறீதரன் தெரிவித்தார்.