October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் இருக்கும் நபர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நோய் அறிகுறிகளுடன் யாரேனும் இருந்தால், அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னர் 011 7966366 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ குணசிங்க பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் உள்ளவர்களை வீட்டாரோ அல்லது அயலவர்களோ வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கும் போது அவர்களுக்கும் தொற்று பரவக் கூடும் என்றக் காரணத்தினால், இந்தத் தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்வதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கும் பட்சத்தில், அந்த இடத்திற்கு விசேட சுகாதார குழுவொன்று விரைந்து அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.