January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘லாஃப்’ எரிவாயு விலையை குறைக்க யோசனை!

‘லாஃப்’ சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு விலையை விடவும் அதிக விலைக்கு லாஃப் எரிவாயு விற்பனை செய்யப்படுவது தொடர்பில், அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

லாஃப் எரிவாயு விலையை குறைப்பதற்கு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை உள்நாட்டு எரிவாயு விலை தொடர்பில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு வழங்கியுள்ளதாகவும், இதன்படி ஒவ்வொரு மாதமும் 5 ஆம் திகதி எரிவாயுவின் விலையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.